Saturday, July 31, 2010

சாதி

இந்த சாதி சாதனை செய்ய சொல்லும் சாதியை குறிக்கவில்லை. இன்றும் என் மக்களிடம் புற்று நோயாய் இருக்கிற சாதியை உரிக்க தோன்றியது இன்று

மக்கள் செய்யும் தொழிலால் அவர்களை குழு படுத்தியிருக்கிறார்கள் அந்நாளில். இது இயற்கை தானே. விவசாயம் செய்பவன் விவசாயி. பானை செய்பவன் குயவன். மலையில் இருப்பவன் மலையன். பிரம்மம் நினைப்பவன் பிராமணன். இதில் ஒன்றும் தவறாக தோணவில்லை. ஒரே தொழில் செய்பவர்கள் கூட்டாக இருக்கும் பொது அந்த குழுவுக்கு ஒரு பெயர் கொடுத்துதானே ஆக வேண்டும்.

செட்டியார், முதலியார் மற்றும் பல சாதியின் பெயர்களுக்கு எதோ காரணம் இருக்கலாம். எனக்கு தெரியவில்லை. இதுவரை சாதி என்ற சொல்லில் ஒன்றும் தவறாக தோன்றவில்லை.

ஆனால் இந்த சாதியில் பிறந்ததாலே இவன் உயர்ந்தவன். இந்த சாதியில் பிறந்ததால் நீ தாழ்ந்தவன் என்று சொல்லும் போது சொல்பவன் மேல் வெறுப்பு தோன்றுகிறது. எது உயர்ந்தது? எது தாழ்ந்தது? நான் செய்யும் தொழில் உயர்ந்தது. உன்னுடுயது தாழ்ந்தது. நீ நான் செய்யும் தொழிலை செய்ய கூடாது. ஏனெனில் உன் முன்னோர் செய்யவில்லை. நீ அந்த சாதியில் பிறக்கவில்லை. என்ன மடத்தனம்? நீ ஒருவனை இழிவாக பேசுவாய்? அவனை உயரவும் விட மாட்டாய்... இதற்கும் மேலை நாடிகளில் இருந்த அடிமைத்தனத்திற்கும் வேறு பாடில்லை.

உனக்கு கோவிலில் நுழைய அனுமதி இல்லை. வீட்டுக்கு வெளியில்தான் நிற்க வேண்டும். எங்கள் வீதிகளில் வர கூடாது. செருப்பணிந்து செல்ல கூடாது. இன்னும் எத்தனையோ.. தொழிலில் வேறுபாடு இருக்கலாம். மனிதனுக்கு தொழிலையும் தாண்டி பல இருக்கிறது. எப்பிடி சக மனிதனை மதிக்காமல் இருக்க தோன்றியது. தத்துவ பூமி, உலக தத்துவங்கள் எல்லாம் இங்கேதான் பிறந்தன என்று மார் தட்டி சொல்லும் இதே இடத்தில தான் இந்த கொடுமையும்.

பெரியார் வந்தார். தீண்டாமை ஒழிந்தது. சம உரிமை எல்லோர்க்கும் கிடைத்தது. இன்றைக்கும் ஆங்கங்கே ஒன்றிரண்டு தீண்டாமை கொடுமை சம்பவங்கள் நிகழத்தான் செய்கிறது கிராமங்களிலும், அறியா மக்கள் வாழும் இடங்களிலும்

நடந்தது போவட்டும். இன்றைய கால கட்டத்தில் இந்த சாதி என்ன பிரச்சனை பண்ணுகிறது?

சாதி மாறி திருமணம் செய்தால் அவர்களை கௌரவக் கொலை செய்தல். என்ன முட்டாள் தனம். இதை கௌரவக் கொலை என்று வேறு சொல்கிறார்கள் மடயர்கள். Honour killing என்ற ஆங்கில வார்த்தை அப்பிடியே மொழி பெயர்க்க வேண்டும் என்பதில்லையே. முட்டாள்களின் வெறியாட்டம் என்றே சொல்லலாம். ஒரே சாதியில் திருமண மானால் இருவரின் பழக்க வழக்கங்கள் ஒத்து போகும். அதனாலேயே அன்று ஒரே சாதியில் பெண் தேடி மனமுடிதிருக்கலாம். இங்கே இரு மனங்கள் ஒத்து போய்தான் திருமணமே நடந்திருகிறது. இதன் பிறகும் இவர்களின் பெற்றோர்கள் சாதி என்ற பெயரில் வறட்டு கொவ்ரவதால் இவர்களை கொலை செய்வார்களாம். இப்போது எனாகு சாதியின் மேல் உள்ள வெறுப்பு கனலாக பற்றி எரிகிறது...

அடுத்த பிரச்சனை. என் சாதி மக்களை மேம்படுத்த அமைப்பு ஆரம்பித்துள்ளேன். கட்சி ஆரம்பித்துள்ளேன். ஏன்? மற்ற சாதியில் இருப்பவர் மக்கள் இல்லையா? மற்ற சாதியில் இருப்பவர்கள் கஷ்ட பட வில்லையா? அது எப்பிடி உன் சாதி மக்கள் உனக்கு இவ்வளவு வேண்டியவர்கள் ஆனார்கள்? மற்ற மக்கள் தயாரிக்கும் பொருட்களை நீ உபயோக படுத்துவதில்லையா? மற்ற மக்களின் சேவைகள் உனக்கு பயன்பட வில்லையா? அடிப்படை மனிதாபிமானம் இழந்து விட்டாயே மானிடா இப்படிப்பட்ட உன் செயலால்.. பிறகு எப்பிடி உன் சாதி மக்களை உயர்த்த போகிறாய்.. இன்னும் என்ன கொடுமை என்றால் இந்த சாதி சங்கங்களை நன்கு கற்றவர்களே ஆரம்பிக்கிறார்கள்... மக்களின் அறியாமை பயன்படுத்தி பணம் பண்ணும் பேய்கள்.. அவர்களை சொல்லி என்ன புண்ணியம்... குறுகிய காலத்தில் முன்னேற்றம் என்ற பார்வையில் என் மக்கள் இந்த சாதி சங்கங்களை ஆதரிகிறார்கள்... இந்த சங்கங்களும் எனக்கு ஒதுக்கிடு இல்லையெனில் ரயில் தண்டவாளங்களை தகர்ப்பேன் என்று மிரட்டுகிறான்.. அன்று ஒரு சாதி மக்கள் திமிர் காட்டினார்கள். இன்று எத்தனை சங்கங்கள்.. எத்தனை மிரட்டல்கள்... சாதி என்ற வார்த்தை வெறுக்கிறார்கள் என்று.. அதற்கு சாயம் பூசி சமூகம் என்று சொல்லி சம்பாரிகிரார்கள். சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிய பாரதி மீண்டும் வந்து சமூகங்கள் இல்லையடி பாப்பா என்று மீண்டும் பாட வேண்டும் போலும். இந்த பண பசி எடுத்த சங்க முதலைகள். சங்கங்கள் அரசியல் கட்சிகளாகி மிரட்டுகின்றன அரசினை..

இன்னொன்று... எல்லா சமுகத்தையும் முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கோடு இட ஒதுகிடு கொண்டு வந்தார்கள். சிலருக்கு இந்த இட ஒதுக்கீடு அநியாயமாக தோன்றுகிறது... பல தலைமுறைகளாக கற்று கற்பித்து வந்தவனின் பிள்ளைகள் பல தலைமுறைகளாக கூலி வேலை செய்தும் கற்று தெளியாமல் வந்தவர்களின் பிள்ளைகளை விட கற்றலில் சாமர்த்திய சாலிகளாக இருக்க கூடும். இதற்கு அறிவியல் ஆதாரம் உள்ளது. டார்வின் கூற்று படி ஒரு உயிரினம் எதற்காக வேண்டி பிரயத்தன படுகிறதோ அந்த முயற்சி பலனளித்து அந்த வேண்டுதல் கைகூடும் என்பதுதான். எடுத்து காட்டு ஒட்டகச்சி விங்கி. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அவை குட்டையே. அது உயரமான மரத்தின் இலைகளை உணவாக சாப்பிட கழுத்தை உயர்த்தி உயர்த்தி அதன் கழுத்து நீண்டது. விடுங்கள். நம்ம பிரச்னைக்கு போவோம். நாம் சமமாக சமுதாயத்தை வளர்க்காமல் விட்டோம். அதற்கு பிராயச்சித்தம் இட ஒதுக்கிடு. முற்பட்டோர் சாதி (Forward). அதிக மதிப்பெண்தான். பிற்படுதபட்டவன் சற்று குறைந்த மதிப்பெண்தான். இருப்பினும் இட ஒதுக்கிடு முறையில் பிற்படுத்த பட்டோனுக்கு படிக்க வாய்ப்பு அளிக்க படுகிறது. இந்த ஒதுக்கிடு முறை பெரியார் காலத்திலே அறிமுக படுத்த பட்டது. பலர் பயனடைந்தார்கள். நல்லது. பொருளாதார ரீதியில் பின்தங்கிய முற்பட்ட சாதி மக்கள் பாதிக்கபட்டார்கள். எண்ணிடம் ஒன்றுமில்லை. என் சாதியால் எனக்கு வாய்ப்பில்லை. ஆம்.. நியாயமில்லைதான்.. என்ன செய்வது.. சில மாணவர்களுக்கு அவர்களின் சாதியால் அவர்களது கன்வவு வீணாயிற்று.. எனக்கு மருத்துவர் ஆக வேண்டுமென்ற ஆசை. நான் முற்பட்ட பிரிவை சேர்ந்தவன்.. எனக்கு வாய்ப்பு இல்லை.. நான் பிறந்த சாதியால் எனக்கு ஏற்பட்ட சாபமா.. ஒரு திட்டம் போட்டோம்...அதில் ஓட்டை இருக்கிறது... சரி செய்வோமா மாட்டோமா... பெரு வாரியான மக்களுக்கு ஆதயம் கிடைகிறது என்பதற்காக ஓட்டையை பெரிதாக்கிக்கொண்டே அல்லவா செல்கிறோம்... ஒரு காலத்தில் வசதி இல்லை.. இந்த சாதியில் இத்தனை மக்கள். இவர்கள் இவ்வளவு பின்தங்கி இருக்கிறார்கள். இவர்களுக்கு இவ்வளவு ஒதுக்கீடு.. என்று ஒரு வரையறை செய்தோம்.. பின்னர் இந்த சாதி சங்கங்கள் எனக்கு தனியாக உல் ஒதுக்கீடு இல்லை அதிக ஒதுக்கீடு என்றார்கள். அரசாங்கம் ஒட்டு எண்ணிகையை பார்த்து சிலவற்றை சரி என்றது. சிலவற்றை நிராகரித்தது. சில சமூகமும் வளர்ந்தது.. சங்கங்களும் கோடியில் சில்லறை பார்த்தன.
இன்றைக்கு என்ன நிலை? முற்பட்ட, பின்தங்கிய, மிகவும் பின்தங்கிய, ஹரிஜன மக்கள், மலை வாழ் மக்கள் என்று பிரிவுகள் இவற்றுள் ஒதுக்கீடு. உண்மையில் என்ன நிலை? பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட மற்றும் ஹரிஜன மக்களில் ஒரு பகுதியினர் கல்வியிலும் பொருளாதார ரீதியிலும் நல்லா நிலையில் இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒதுக்கீடு தருவதில் நியாயமே இல்லை. நான் பிற்பட்டவன் ஆனால் எனக்கு எல்லாம் இருக்கிறது. நீ முற்பட்டவன். உன்னிடம் கல்வி இல்லை.பொருள் இல்லை. இருந்தாலும் உனக்கு வாய்ப்பு கிடையாது ஏனென்றால் இட ஒதுக்கீடு. நீ முற்பட்டவன் நான் பிற்பட்டவன்... என்னையா இது...இப்பவும் இந்த சாதி சங்கங்களுக்கு பயந்து மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி வாரி கணக்கெடுப்பு செய்வார்களாம் இந்த அரசாங்க ராஜாக்கள்.. சம உரிமை என்பேதேல்லாம் வெறும் வாதம்..அரசாங்கத்தின் செயல்கள் சாதியின் தாகத்தை அதிக படுத்தவும் சாதி சங்கங்கள் சிறப்புடன் வளரவுமே உரம் போடுகின்றன. பொருளாதார ரீதியில் உன்னால் கணக்கெடுப்பு செய்ய முடியாதா... ஒருவன் பொருளாதாரத்தை கண்டுபிடிக்க உன்னால் முடியாதா... இதற்கு முடியாத அரசா... நீ வல்லரசாயின் என்ன பயன்.. சாதி கட்சிகளுக்கு தூபம் போடுகிறாயே... உனக்கு இன்று என்ன வசதி இல்லை... கணினி இல்லையா.. இல்லை அதை உபயோக்கிக்க தெரிந்த மக்கள் கூட்டம் இல்லையா.. உனக்கு வேண்டும் என்கிற விவரத்தை சேர்த்து வெய்து கொள்ள.. மற்ற நாடுகள் செய்ய வில்லையா.. பொருளாதார ரீதியாக கணக்கெடுப்பு எடுத்து அதனடிப்படையில் ஒதுக்கீடு தருவேன்...திட்டம் பெரிதுதான்.. நான் செய்வேன் என்கிற துணிவு இல்லையா...

அரசாங்கம் என்பது கடைசியில் மக்கள் தானே..தன் சாதிக்காரன் என்றவுடன் அவன் நல்லவனா கெட்டவனா, இந்த பதவிக்கு தகுதியானவனா என்று ஒட்டு போடும் அறிவிழி தானே என் மக்கள்.

வயிறு பற்றி எரிகிரதடா இந்த சாதியை நினைக்கையிலே.. இப்போது சாதி ஒழிக்கும் வெறி எனக்கு பிடிக்கிறது...

Friday, July 30, 2010

ஆக்கலும் அழிதலும்

எதுவுமே புதுசா உருவாகுறதும் கெடயாது எதுவும் அழியறதும் கெடயாது. ந்யுட்டன் விதியோட கொஞ்சம் மாற்றினது தான். அவர் சக்தி புதிதாக தோன்றுவதும் இல்லை அழிவதும் இல்லைனாறு. நான் அத கொஞ்சம் விரிவுபடுத்தி இருக்கேன்.

சக்தி மட்டும்ல நியுட்டா. இந்த உடல், ஆன்மாகூட அப்பிடிதானு தோணுது. மண்ணு தின்கிற உடம்புன்னு சொல்லும் போது ஒன்னும் பெரிசா யோசிக்கல. அந்த வாக்கியத்த நல்லா பார்த்தா என்ன ஒரு நிஜம். உசுரு போன வுடனே இந்த உடம்ப எரிசாலும் புதைச்சாலும் இல்ல ஒண்ணுமே பண்ணாம அப்பிடியே மக்க விட்டாலும் மன்னோடத்தான் கலந்தவனும். அந்த மண்ணு எடுத்து ஒருத்தன் வீட்டையோ எதையோ கட்டிடானு வெச்சுப்போம். நேத்து உடம்பா இருந்த ஒரு பொருள் இன்னிக்கு ஒரு கட்டடமா ஆயிடுச்சு. அப்பிடியே உல்டாவா யோசிச்சேன்னா இப்போ கட்டடமா (பொதுவா அக்ரினையா) இருக்குற ஒரு இது, நேற்று ஒரு உயிரினையின் உடம்பாகவோ அல்லது உடம்பின் ஒரு பகுதியாவோ இருந்திருக்கலாம். கல்லாதான் ஆவனும்னுல. அந்த மண்ணுல செடி முளைக்கலாம். பருத்தியா இருக்கலாம். அரிசியா இருக்கலாம். பருத்திய நாம துணியாக்கி போட்டுக்கலாம் இல்ல அரிசிய பொங்கி சாப்பிடலாம். எளிமையா புரிஞ்சுக்க வெறும் மனுசன வெச்சு பார்த்தோம். உலகத்துல இருக்குற மற்ற உயிரினத்தையும் உள்ள கொண்டு வருவோம். பருத்தி கொட்டைய மாட்டுக்கு வைக்கலாம். அது உடம்புல சதையா சேரலாம். இல்ல பாலா வந்து நாம குடிக்கலாம். இல்ல சானமா வரலாம். இப்பிடி ஒரே பொருள்தான் மாறி மாறி சுத்திகிட்டே இருக்கு.

இதுக்கு அறிவியல் ரீதியா எடுத்து காட்டு சொல்லலாம்.

தண்ணி வெப்பத்தால நீராவி ஆகி வானத்துல மேகமா திரியுது. அப்பறம் திரும்ப குளிர்ந்து மழையா வருது. ரொம்ப குளிர்ந்டுதுன்னா பனிக்கட்டி ஆவுது. இந்த மாற்றத்தில் திடம்(solid), நீர்மம்(liquid) மற்றும் வாயுகலாக(gas) ஒரே மூலகுறுதான்(molecule). தண்ணீர்...

பல நூறு ஆண்டுகளாக மண்ணுக்குள் புதைந்த கரிமங்கள் (Organic - மரம், செடி, விலங்கினங்களின் உடற் கூறுகள்) நிலக்கரிகலாக மாறுகின்றன. நாளடைவில் அவை கிராஃபைட்டு (Graphite), வைரம் மற்றும் பாறைநெய் (Petroleum) இப்படி உரு மாறுகின்றன. இவைகளின் மூலக்கூறுகள் வெவ்வேறு. கார்பன் மற்றும் ஹைட்ரஜன் வெவ்வேறு தொகுப்புகளாய் சேர்வதால் வரும் வித்தியாசங்கள். மேலும் விவரங்கள் வேதியியல் பாடத்தில் காணலாம்

இன்னும் சற்று ஆழ்ந்து பாப்போம்.

எல்லா உயிரினையும் அக்ரினையும் அணுக்களின் கூறுகளே. ஒவ்வொரு அணுவும்(Atom) நேர்மின்னி(Proton), எதிர்மின்னி(electron) மற்றும் நொதுமி(Neutron) இவைகளால் ஆனது. ஒரு நேர்மின்னி, ஒரு எதிர்மின்னி மற்றும் ஒரு நொதுமி உள்ள அணு ஹைட்ரஜன் எனப்படுகிறது. இரண்டு நேர்மின்னி, இரண்டு எதிர்மின்னி மற்றும் இரண்டு நொதுமி உள்ள அணு ஹீலியம் எனப்படுகிறது. தங்கம் 79 நேர்மின்னி மற்றும் 79 எதிர்மின்னி கொண்டது. இரண்டு ஹைட்ரஜன் அணு, ஒரு உயிர்வாயு (oxygen) அணு சேர தண்ணீர் உண்டாகிறது. ஒரு கல்சியம் (calcium) அணு, ஒரு கார்பன் அணு மற்றும் இரண்டு உயிர்வாயு அணு சேர சுண்ணாம்பு உருவாகிறது. மண் சிலிக்கா அணுக்களால் (17 நேர்மின்னி மற்றும் 17 எதிர்மின்னி) ஆனது.

அணுக்களில் எதிர்மின்னி, நேர்மின்னி அதிகரிக்க வாயு தன்மையில் இருண்டு திரவ தன்மைக்கும் பின் திட தன்மைக்கும் மாறுகிறது. எடுத்து காட்டாக ஹைட்ரஜன் வாயு. சோடியம் (உப்பு) திடம் ஆனாலும் நீரில் கரையும் தன்மை கொண்டது. திரவம் என்றே கொள்ளலாம். தங்கம், இரும்பு திட பொருட்கள்.

மேற்கண்ட பத்தியிலிருந்து இவ்வாறு யோசிக்கலாம். 79 ஹைட்ரஜன் அணுக்களை ஒன்று சேர்த்தல் தங்கம் ஆகிவிடுமோ என்று. ஆம் ஆகலாம். நேர்மின்னி எதிர்மின்னிகல் இடம் மாற எது வேண்டுமானாலும் எப்பிடி வேண்டுமானாலும் மாறலாம். மண் தங்கம் ஆகலாம். கரி இரும்பாகலாம்.

எதுவும் புதிதாக வருவது இல்லை. ஒன்று மற்றொன்றாக மாறுகிறது. அது சில சமயங்களில் நேராகவே நமக்கு புரிகிறது. சிலவற்றை நாம் இன்னும் அறிவியல் ரீதியாக உறுதி படுத்த வில்லை.

(இததான் விடலசாரியார் அடிப்படைய வெச்சு படம் எடுத்தாரோ... சித்தர்கள் இதைத்தான் புரிஞ்சு, எப்பிடி மாற்றனும்னு தெரிஞ்சுகிட்டு இருப்பாங்களோ?)

எளிமையா சொன்னோம்னா
இங்க இருக்குற அணுக்கள் தான் மாறி மாறி வேற வடிவம் எடுத்துட்டு இருக்கு

வெங்காயம் உரிச்சு கண்ணு எரியுதுபா!!! பொருள பார்த்தாச்சு!!! இத இயக்குர உயிரு, ஆன்மாநு சொல்றங்களே... அதுவும் இந்த மாதிரித்தான் எதோ சுத்தி சுத்தி வருது
இத பத்தி அப்பறம் உறிக்கிறேன் வெங்காயம்!!! வெங்காயம்!!!

Thursday, July 29, 2010

ஏன் இந்த வெங்காயம் பதிவு எழுதுறான்?

என்னைக்குமே ஒரு விஷயத்த ஒரே மாதிரி யோசிக்க மாட்டான் இந்த வெங்காயம். இன்னைக்கு சரின்னு சொல்றத நாளைக்கு கொஞ்சம் மாற்றி இது இன்னும் கொஞ்சம் சரியாய் இருக்குனு சொல்லுவான். இது ஒவ்வொரு நாளும் இந்த வெங்காயம் புதுசா தெரிஞ்சுகிரானோ இல்ல சரியாய் தெரிஞ்சுகிரானோ, எதுவா வேணா இருக்கலாம். இவன் இன்னிக்கு தப்பா கூட பேசலாம். அட கால மாற்றமா கூட இருக்க்கலாம்ய. இவன் எப்பிடி வளர்றான், எப்பிடி மாறுறான் என்பத பார்கத்தான் எழுதுறான்.

எல்லாரும் எல்லா விஷயத்தையும் அநுபவிச்சு இல்ல ஆராஞ்சு தெரிஞ்சுக்க முடியாதாம்ல. எங்கேயோ படிச்சதுதான். சில விஷயங்கள படிச்சும், கேட்டும் பக்குவ பட வேண்டியதுதான். அதுக்காக உருவானதுதான் இவ்வளவு புஸ்தகம், பாட்டு எல்லாம். அந்த வகைல இந்த வெங்காயம் எதோ எழுத நெனைக்கிறான்

இந்த வெங்காயத்துக்கு என்ன தோணுதோ அத எழுத போறான். பேச்சு நடைலேயே எழுத போரனாம்பா இந்த வெங்காயம்

அதெல்லாம் சரி, இவன் எங்க பதிவு பக்கம் வந்தான்னு கேக்குறிங்களா

வெற்றிக் கதிரவன்னு எனக்கு ஒரு நண்பன். அவன் ஒரு பதிவு எழுதுறவன்.. எனக்கும் எழுதனும்னு ரொம்ப நாளா தலைல ஓடிகிட்டு இருந்ததுதான். இந்த எண்ணமும், இந்த நண்பனும் சேர்ந்து இந்த வெங்கயத்த பதிவுல எழுத தூண்டிருக்கு

அதுக்கு வெற்றிக் கதிரவனுக்கும், மணற்கேணி சங்கத்துக்கும் ஒரு நன்றி போட்டறலாம்

வெங்காயத்தின் நன்றி

Wednesday, July 28, 2010

ஏன் வெங்காயம்?

பகுத்தறிவு பகலவன் பெரியார் அடிக்கடி சொன்னதால என் மனசுல நின்றிச்சோ?

ஒன்னும் இல்ல எதுவுமே இல்ல எல்லாம் எதோ மாயைனு தோனிடுச்சோ? உரிக்க உரிக்க ஒன்னும் இல்லன்னு நெனச்சுதான் வெங்காயம்னு வெச்செனோ?

நான் ஒரு டாக்டர், ஒரு வாத்தியார், ஒரு ரௌடி, ஒரு திருடன் இதெல்லாம் வெங்காயதோட மேல் தோல் மாதிரி. அது வெளில இருக்குற மண்ணு தூசு பட்டு எப்பிடி வேனா இருக்கும்
உரிக்க் உரிக்க எல்லா மனுசனுக்குல்லையும் கணமா ஒரே மாதிரி எதோ இருக்குன்னு தோணுதோ?

வெங்காயத்துல நெறைய சத்து இருக்காம். அது எதோ ANTI-OXIDANTAMல. வெங்காயம் சாப்புட்டா ஏதேதோ நோய் எல்லாம் கூட வராதாம். வெங்காயம் போட்டா சாம்பார் கூட்டு எல்லாம் ஜோரா இருக்கும் ருசி. ருசிய நெனச்சு வெங்காயம்னு வெச்சுடேனோ?

வெங்காயம் உரிக்க கண்ல நீர் எட்டி பார்க்கும்
இந்த பித்தனின் பிதற்றலில் கண்ணீர் எட்டி பார்க்கும் என்று நினைத்து வெங்காயம் என்று வெச்செனோ?

என்னமோ போங்கையா!!! இது என்ன பெரிய வெங்காயம்?