Monday, December 27, 2010

வெங்காயச் சிந்தனை

தனித்திரு. விழித்திரு.

முதலில் உன்னை கவனி. உன் எண்ணத்தை கவனி. உன் சிந்தனை கவனி. உன் சிந்தனை அடக்கு. உன் எண்ணத்தை அடக்கு. உன்னை அடக்கு. தன்னை அடக்காதவன் ஊரை அடக்கி என்ன பயன்?

நான் என்னுடையது என்ற எண்ணம் வேண்டாம். உன்னையும் அவன் என்றே கொள். உன்னை நீயே உன் பக்கத்தில் நின்று பார். எதுவும் என்னுடையது அல்ல என்பது விளங்கும்.

நீ நினைப்பதை எல்லாம் நீ செய்வதும் இல்லை. உன்னால் இயல்வதும் இல்லை. உன்னை நீயே பின்பற்றாத போது மற்றவரை உன்னை பின்பற்ற நினைக்காதே. "நான் செய்யவில்லை நீ செய்" என்ற அறிவுரை வீண்.

ஒரு குழப்பம்
முற்றும் (ஆசையை) துறந்தவன் துறவி. யார் இங்கே துறவி? புத்தன் துறவியா? மக்கள் துன்பத்தில் இருந்து விடுபட ஆசை வெய்தானே!!! சங்கரர் துறவியா? வேதம் உண்மை என்று நிறுபிக்க ஆசைபட்டாரே? அட இந்த வெங்காயம் துறவியா? தன் சிந்தனை பதிவு செய்து வெக்கிரானே!!! என்ன ஆசையோ!!! ஒன்றும் அறியா குழந்தை துறவியா? அதுக்குத்தான் எதுமேலையும் ஆசை இல்லையே!!! பசிச்சா அழுவுதே? பால் மேல ஆசையா? பசி இயற்கையப்பா!!! குழந்தை துறவின்னு வெச்சுப்போம்!!! இயற்கையா இருந்தா துறவின்னு வெச்சுப்போம். ஒரு வயசுல ஒரு ஆணுக்கு இன்னொருத்தி மேல ஆசை வர்றதும் இயற்கைதானே? . அப்ப காதலிப்பவன் துறவியா?? ஆசையே இயற்கைதானோ? அப்ப துறவியே பொய்யா?

மனிதா! நீ சொன்ன நல்லது தீயது அறியாமல், தன் மலத்தை கண்டும் முகம் சுளிக்காமல், நீ சொன்ன சாதி, மதம், கடவுள் தெரியாமல், பயம் தெரியாமல், இருள் வெளிச்சம் வேறுபாடில்லாமல், பாமரன் படித்தவன் என்ற வேறுபாடில்லாமல், உன் பணம் தெரியாமல், நீ உன்னை அறியாமல் ஒரு குழந்தையாய் இருந்தாயே!!! ஞானம் தேடி பெறுவது ஒரு நிலை!!! ஞானம் உதறி பெறுவது ஒரு நிலை!!! இந்த அறிவை ஞானத்தை உதறி ஒரு குழந்தையாய் வாழ ஆசை.

இன்னொருவன் உன்னை கொல்வதை விட நீ மற்றவனை கொல்வதுதான் பெரிய தவறு. இன்னொருவன் உன்னை ஏமாற்றுவதை விட நீ மற்றவனை ஏமாற்றுவது பெரிய தவறு.

Be the change that you want to be - காந்தி

நான் யார்? ஒன்றுமில்லை. நான் நீ எல்லாம் ஒன்றே!!!

வெங்காயம்...

Saturday, December 25, 2010

வெங்காயத்தின் இலக்கிய ஆர்வம்

வெங்காயம் படித்த சில இலக்கிய நூல்கள்

கல்கி - பொன்னியின் செல்வன் , சிவகாமியின் சபதம்
பால குமாரன் - இரும்புக் குதிரைகள் , கிருஷ்ண அர்ஜுனன், தாயுமானவன் , இனி எல்லாம் சுகமே, தோழன், கருணை மழை, கடலோர குருவிகள் கற்றுக்கொண்டால் குற்றமில்லை , சிம்மாசனம்
சுஜாதா - மெரினா , காயத்ரி , என் இனிய இயந்திரா, மூன்று நாள் சொர்க்கம்
ஜெய காந்தன் - ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம், சில நேரங்களில் சில மனிதர்கள்
வைரமுத்து - தண்ணீர் தேசம்

வெங்காயத்தை கவர்ந்தவை -

சில நேரங்களில் சில மனிதர்கள் - ஒரு நாள்ல 400 பக்கம் படிக்க முடியும்னு இந்த புஸ்தகம் படிச்சபதான் தெரிஞ்சுது. computerla மெமரி டம்ப் (memory dump) நு சொல்லுவாங்க. அந்த மாதிரி என்ன ஒரு ஆக்கம். ஒரு பொண்ணோட மனதையும் அவ சிந்திப்பதையும் என்னாமா எழுதி இருக்காரு. தப்பு சரி ரெண்டுமே மனுஷங்க சொன்னது. இன்னைக்கு ஒருத்தன் நல்லவன். நாளைக்கு அவனே கேட்டவன். இன்னிக்கு கெட்டவன் நாளைக்கு நல்லவன். தலைல பல்பு எரியுதுபா புக்க படிச்சுட்டு.

பொன்னியின் செல்வன் - நான் படிச்ச முதல் தமிழ் நாவல். வரலாற்றோட சேர்ந்து நல்ல கற்பனை. நல்ல கதை, நல்ல கதா பாத்திரம், மொத்ததுல நல்ல வரலாற்று நாவல்பா

கருணை மழை - அத்வைத கதை. பால குமாரன் நல்லா உள்ள எறங்கி எழுதி இருப்பாரு.என் கண்ல தண்ணி வந்துடுதுடா கடைசியில. ஒரு உருக்கமான கதை

காயத்ரி - வெங்காயம் படிச்ச நூலாசிரியர்கல்லேயே சின்னதா ஆனா பயங்கர சுவாரஸ்யமா கதை எழுதுறதுன்னா அது சுஜாதா அவர்கள் தான். சூப்பர் suspense கதை இந்த காயத்ரி. இவர வெங்காயம் நேர்ல ஒரு தடவை பார்த்திருக்கலாம். அவர் பொய் சேர்ந்துட்டாரு வெங்காயத்துக்கு இலக்கியம் ஆர்வம் வர்றதுக்கு முன்னாடியே

Friday, December 17, 2010

வெங்காயத் தன்மை 1

வெங்காயம் எதோட சேர்த்தாலும் அப்பிடியே ருசி அதிகமாயிடும். தோசைல போட்டா வெங்காய தோசை. ருசி ஜாஸ்தி. முட்டையோட போட்டா omlette. extra taste. சாம்பார்ல போட்டாலும் ருசி ஜோர்தான். அதே நேரத்துல வெங்காயத்த ஒன்னும்,பண்ணாம அப்பிடியே வெச்சுருந்தாலும் மாசக் கணக்குல ஒன்னும் ஆகாது. இப்ப ஏன் இப்பிடி ஒரு ஆராய்ச்சின்னு கேட்கறிங்களா? கீழ படிங்க.

இந்த வெங்காயம் இருக்கானே அவன் எல்லார்டையும்,நல்லா பழகிடுவான். அப்பிடியே நட்பு பொங்கி வழியும். பாசமும் பொங்கி வழியும். ரொம்ப சந்தோசமா சுத்துவான். ஒத்துக்காம போன ஆளுங்க ஒன்னுதான் ஞாபகம் இருக்கு இந்த வெங்காயத்துக்கு. சாதரணமா இந்த வெங்காயத்தோட பழகுறவங்களும் சரி இது இப்பிடியே நல்ல நண்பனா பழகிட்டு இருக்கும்னு நெனப்பாங்க. சாதாரண எதிர்பார்ப்பு தானே!!!

ஆனா இந்த வெங்காயம் அந்த பழகுன நண்பர்களை விட்டு எங்கயாவது தள்ளி போவுதுன்னு வெச்சுகங்களேன். அது வேலை மாறி போறதா இருக்கலாம் இல்ல வீடு மாறி போறதா இருக்கலாம். அவ்வளவுதான், பழைய நண்பர்கள்ட பேசுறதே குறைஞ்சுடும். ஒரு தொலைபேசி அழைப்பு கூட பண்ணாது. இத விட கேவலம் என்னன்னா, அவங்க கூப்பிட்டா கூட தொலைபேசில பேசாது. இன்னும் அவமானமான விஷயம் என்னன்னா அவன் நண்பர்கள் கல்யாணத்துக்கோ இல்ல ஒரு நல்ல விஷயதுக்கோ கூட அழைச்சு பேசாது. அப்பறம் பேசலாம்னு தோணும். எப்பயாவது இதுவா போன் பண்ணும். இத்தனைக்கும் அவங்களோட ஒரு பிரச்னையும் இருக்காது. அது என்ன திமிரு? எங்க போனாலும் இந்த வெங்காயத்துக்கு நண்பர்கள் அமையுறாங்க அப்பிடிங்கிற திமிரோ? இல்லையே. ரொம்ப நாலா யாருமே இல்லாம தனியா இருந்துருக்கு இந்த வெங்காயம். குறைச்சலா ஆறு மாசம் அப்பிடி இருந்தது ஞாபகம் இருக்கு. இப்படி பைத்தியம் மாதிரி பண்றது வெங்காயத்துக்கு இருக்கிற பெரிய குறைதான்.

எதுலயும் ஒரு ஈடுபாடு இல்லாததுனால இப்பிடியோ?. அதுல ஒரு நம்பிக்கைதான் இந்த வெங்காயத்துக்கு. பெரிய சித்தரா இவரு? அவ்வளவு பெரிய ஞானியா இருந்தா யார்கிட்டயும் பழகாம இருக்கட்டும் சிடு மூஞ்சியா. இந்த மாதிரி ஒன்னு ரெண்டு பேர் இல்ல. நிறைய பேர்கிட்ட இப்பிடி பண்ணிடிச்சி.

ஆனா இந்த வெங்காயத்துக்கும் தோணுது. பேசணும். ஐயோ இவங்க வருத்த பட்ராங்கலேன்னு. ஆனா அப்பிடியே இருக்கும். ஒன்னும் பண்ணாம இந்த தத்தி முண்டம். இத மாத்தனும்.

எவ்வளவு நல்ல நண்பர்கள் இந்த வெங்காயத்துக்கு. இந்த பதிவு எழுதுறதே இந்த மாதிரி பண்ண நண்பர்கள்கிட்ட இந்த வெங்காய தன்மைய சொல்றதுக்கு தான். மன்னிப்பு கேட்டா பண்ணது சரி ஆகாது.

இந்த பதிவ படிச்சி படிச்சி, ஏதாவது மன மாற்றத்த பண்ண முடியும்னு நம்புது இந்த வெங்காயம்

இப்ப ஒரு நண்பருக்கு தொலை பேசியில் அழைப்பு!!!