Monday, December 27, 2010

வெங்காயச் சிந்தனை

தனித்திரு. விழித்திரு.

முதலில் உன்னை கவனி. உன் எண்ணத்தை கவனி. உன் சிந்தனை கவனி. உன் சிந்தனை அடக்கு. உன் எண்ணத்தை அடக்கு. உன்னை அடக்கு. தன்னை அடக்காதவன் ஊரை அடக்கி என்ன பயன்?

நான் என்னுடையது என்ற எண்ணம் வேண்டாம். உன்னையும் அவன் என்றே கொள். உன்னை நீயே உன் பக்கத்தில் நின்று பார். எதுவும் என்னுடையது அல்ல என்பது விளங்கும்.

நீ நினைப்பதை எல்லாம் நீ செய்வதும் இல்லை. உன்னால் இயல்வதும் இல்லை. உன்னை நீயே பின்பற்றாத போது மற்றவரை உன்னை பின்பற்ற நினைக்காதே. "நான் செய்யவில்லை நீ செய்" என்ற அறிவுரை வீண்.

ஒரு குழப்பம்
முற்றும் (ஆசையை) துறந்தவன் துறவி. யார் இங்கே துறவி? புத்தன் துறவியா? மக்கள் துன்பத்தில் இருந்து விடுபட ஆசை வெய்தானே!!! சங்கரர் துறவியா? வேதம் உண்மை என்று நிறுபிக்க ஆசைபட்டாரே? அட இந்த வெங்காயம் துறவியா? தன் சிந்தனை பதிவு செய்து வெக்கிரானே!!! என்ன ஆசையோ!!! ஒன்றும் அறியா குழந்தை துறவியா? அதுக்குத்தான் எதுமேலையும் ஆசை இல்லையே!!! பசிச்சா அழுவுதே? பால் மேல ஆசையா? பசி இயற்கையப்பா!!! குழந்தை துறவின்னு வெச்சுப்போம்!!! இயற்கையா இருந்தா துறவின்னு வெச்சுப்போம். ஒரு வயசுல ஒரு ஆணுக்கு இன்னொருத்தி மேல ஆசை வர்றதும் இயற்கைதானே? . அப்ப காதலிப்பவன் துறவியா?? ஆசையே இயற்கைதானோ? அப்ப துறவியே பொய்யா?

மனிதா! நீ சொன்ன நல்லது தீயது அறியாமல், தன் மலத்தை கண்டும் முகம் சுளிக்காமல், நீ சொன்ன சாதி, மதம், கடவுள் தெரியாமல், பயம் தெரியாமல், இருள் வெளிச்சம் வேறுபாடில்லாமல், பாமரன் படித்தவன் என்ற வேறுபாடில்லாமல், உன் பணம் தெரியாமல், நீ உன்னை அறியாமல் ஒரு குழந்தையாய் இருந்தாயே!!! ஞானம் தேடி பெறுவது ஒரு நிலை!!! ஞானம் உதறி பெறுவது ஒரு நிலை!!! இந்த அறிவை ஞானத்தை உதறி ஒரு குழந்தையாய் வாழ ஆசை.

இன்னொருவன் உன்னை கொல்வதை விட நீ மற்றவனை கொல்வதுதான் பெரிய தவறு. இன்னொருவன் உன்னை ஏமாற்றுவதை விட நீ மற்றவனை ஏமாற்றுவது பெரிய தவறு.

Be the change that you want to be - காந்தி

நான் யார்? ஒன்றுமில்லை. நான் நீ எல்லாம் ஒன்றே!!!

வெங்காயம்...

No comments:

Post a Comment